மணிப்பூரில் கிறிஸ்தவ பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் வீடியோ என பரவும் வதந்தி

அட்மின் மீடியா

0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு பெண்ணை  கொடுரமான முறையில் கோடாலியால் தாக்கி கொலை செய்யும் வீடியோவையும் அதனுடன் மணிப்பூரில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை RSS கும்பல் கொடூரமாக கொலை செய்யும் வீடியோ. என்று ஒரு வீடியோவை ஷேர் செய்து  வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த தகவலில் உள்ளது போல் அந்த வீடியோ மணிபூரில் நடந்தது இல்லை

அந்த பெண் கிருஸ்தவரும் இல்லை

அந்த பெண்ணை அடிப்பவர்கள் RSS கும்பலும் இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள  பெண் பிரேசிலின் சியாரா நாட்டை சேர்ந்தவர் ஆவார்

அந்த நாட்டில் உள்ள ஒரு பெண்ணைதான் அது போல் அடித்து கொலை செய்துள்ளார்கள்

அந்த பெண்ணின் பெயர் Thália Torres de Souza ஆகும் மேலும் 23 வயது தான் ஆகின்றது .அவரை ஏன் அது போல் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை மேலும் இது போல் அங்கு அடிக்கடி இது போல் நடப்பதாகவும் cn7,com செய்தியில் தெரிவித்துள்ளார்கள்

 ஆனால் சிலர் அந்த மலேசியாவில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/feminicidio.parem.de.nos.matar/posts/184951753038166