வில்லங்க சான்றிதழை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி encumbrance certificate

அட்மின் மீடியா

0

வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.  

  

வில்லங்க சான்றை பார்ப்பதற்கு, https://tnreginet.gov.in/portal/  என்ற இணையதளத்தில் E-services – Encumbrance Certificate –
View EC என்ற லிங்க்கினை க்ளிக் செய்து வில்லங்கச் சான்றிதழை
இலவசமாகப் பார்க்கலாம்.

உங்கள் சொத்திற்க்கு ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி:-

 முதலில் வில்லங்க சான்றை பெற https://tnreginet.gov.in/portal/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.    

அடுத்து அதில் மின்னணு சேவைகள் என்பதை கிளிக் செய்யவும்.

அதன் கீழ்  வில்லங்க சான்று ஆப்ஷன் வரும் அதை க்ளிக் செய்தால் வில்லங்க சான்று ஆவணம் பார்வையிட என வரும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்   

அதன் பிறகு உங்கள் நிலத்திற்க்கான மண்டலத்தை தேர்வு செய்யவும். 

அடுத்து உங்கள் நிலத்திற்க்கான மாவட்டத்தை தேர்வு செய்யவும்.  

அதன் பிறகு உங்கள் நிலம் பதிவு செய்யப்பட சார்பதிவாளர் அலுவலகத்தின் ஊர் பெயரை தேர்வு செய்யவும். 

அடுத்து நீங்கள் எந்த ஆண்டில் இருந்து தேடவிரும்புகின்றீர்களோ அந்த தேதியே தேர்வு செய்யவும். 

அதற்க்கு அடுத்து புல விவரங்கள் என்ற பகுதியில் உங்கள் நிலம் உள்ள கிராமத்தின் பெயரை தேர்வு செய்யவும்.  

அதன் பின்பு புல எண் என்ற இடத்தில் நீங்கள் தேட விரும்பும் நிலத்தின் புலன் எண்ணை பதிவு செய்யவும்.  

அதற்க்கு பின்பு  உட்பிரிவு எண் என்ற இடத்தில் நீங்கள் பதிவு செய்த புலன் எண்ணின் உட்பிரிவு எண்ணை பதிவு செய்யவும்.  

அதன் கீழ் உள்ள சேர்க்க என்ற பட்டனை அழுத்தி இந்த விவரங்களை சேர்க்கவும்,  

அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Captcha Code பதிவு செய்ய வேண்டும்.பிறகு தேடுக என்ற பட்டனை அழுத்தவும்.  

இப்போது உங்கள் நிலத்தின் வில்லங்கச் சான்றை பதிவிறக்கம் செய்வதற்க்கான திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய என்ற சிகப்பு நிற லிங்க் வரும் அதை கிளிக் செய்து உங்கள் வில்லங்கச் சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  

அதில் உங்கள் சொத்தின் விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள்