அட்மின் மீடியா
0
500 நோட்டில் அதன் வரிசை எண் அச்சாகும் இடத்தில் நட்சத்திரக் குறியீடு
அதாவது ஸ்டார் * இருந்தால் அந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது என்று சமூக
ஊடகங்களில் வதந்தி பரவியது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில்:-
நம்பர் சீரிஸில் ஸ்டார் குறியீடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை இல்லை அவை செல்லும் என விளக்கம் அளித்துள்ளது.
அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள நட்சத்திரக் குறி, அந்த நோட்டு மாற்றப்பட்டதா அல்லது
மறுபதிப்பு செய்யப்பட்டதா என்பதைக் குறிப்பதற்க்காகதான் அது உள்ளது.
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கையில் அதில் ஏதேனும் குறை / அல்லது தவறு இருந்தால் அந்த நோட்டுக்களுக்கு
பதிலாக, அதே எண் வரிசையில் புதிய நோட்டினை அச்சடிக்க வேண்டியதாகிறது.
அவற்றை தனித்து காட்டுவதற்காகவே எண் வரிசையின் இடையில் * குறியீடு
பொறிக்கப்படுகிறது. மற்றபடி இதர ரூபாய் நோட்டுகள் போலவே * இடம்பெற்ற
நோட்டுகளும் செல்லும்” என ரிசர்வ் வங்கியின் விளக்கம் அளித்துள்ளது.எனவே இந்த நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்கள்
பயப்பட வேண்டாம்.
ஸ்டார் குறியீடு உள்ள நோட்டுகள் போலியானவை என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி, குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.