வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதம் தோறும் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா

0

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஆட்சியர் மு.அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12-ம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

இதற்கு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். மேலும், மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் கிண்டியில் உள்ள சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப் பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

 தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி / பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுதிறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

 

 

விண்ணப்பிக்க தகுதி:

விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.72,000-க்கு மிகாமல் இருப்பவரா இருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரி படிப்பினை தமிழ்நாட்டிலேயே முடித்திருக்க வேண்டும்

 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000/-ஆகும்.

தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். 

 

அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்கக்கூடாது. பள்ளி/கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது.

 

உதவி தொகை எவ்வளவு:

,

பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு  ரூ. 200, 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூ. 300, 

12-ஆம் வகுப்பு, பட்டய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400,

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூ. 600 

மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பு:

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது எனவே உங்கள் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பியுங்கள்