சவூதி அரேபியாவில் நர்ஸ் வேலை மாத சம்பளம் 1 லட்சம் உடனே விண்ணப்பியுங்கள் nurse job vacancy in saudi arabia

அட்மின் மீடியா

0

 தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு நிறுவனம் (OMCL) வாயிலாக வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும்.

இந்நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த பலர் உலகம் முழுவதும் உள்ள ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு பணிகள் செய்து வருகின்றார்கள் 

மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பணியிடம்:-

அரசு மருத்துவமனை சவுதி அரேபியா

பணி:-

செவிலியர் 

கல்விதகுதி:-

பி.எஸ்சி(நர்சிங்) முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் 

வயது வரம்பு:-

35 வயதிற்குள் இருக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

கேரளா கொச்சினில் நேர்முக தேர்வு நடைபெறும் நாள்:-

07-08-2023,

08-08-2023,

09-08-2023

10-08-2023

பணி சிறப்பம்சங்கள்:-

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 

உணவுப்படி, 

இருப்பிடம், 

விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டில் வேலையளிப்பவர்களால் வழங்கப்பட்டும்.

மாத சம்பளம்:-

80,000  – 1,00,000

மேலும் விவரங்களுக்கு:-

http://www.omcmanpower.com/jobInfo.php?jid=338

குறிப்பு:-

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு மற்றும் பணி விபரங்களின் தகுதியை பொறுத்து முன்னிரிமை வழங்கப்படும்.இந்தப்பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ரூ 35,400 மட்டும் வசூலிக்கப்படும். தகுதியும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

nurse job vacancy in saudi arabia

nurse salary in saudi arabia

nurse salary saudi arabia

saudi nurse salary

bsc nursing salary in saudi arabia

Bsc Nurse Jobs in Saudi Arabia