ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு 4 பேர் உயிரிழப்பு ஆர்.பி.எப். வீரர் கைது நடந்தது என்ன? முழுவிவரம்





அட்மின் மீடியா

0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயில்  எண் 2956 மும்பை அருகே உள்ள பால்கர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்  ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 


நடந்தது என்ன:-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயில்  எண் 2956 மும்பை அருகே உள்ள பால்கர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது பி-5 ரெயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சேத்தன் சிங்கிற்கும், அவரது உயர் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது அதிகாலை ஏற்பட்ட மோதலில் சேத்தன் சிங் கண் இமைக்கும் நேரத்துக்குள் தனது தானியங்கி துப்பாக்கியால் சுடதொடங்கினார்அதில் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

பயணிகள் மீது துப்பாக்கி சூடு:-

துப்பாக்கி சத்தம்  கேட்டு பி.5 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீதும் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்

அடுத்து வரும் தாஹிசார் ஸ்டேஷன் அருகே கான்ஸ்டபிள் சேத்தன் சிங்கை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரெயிலுக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கண்டிவலி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு வீரரே பயணிகளை சுட்டுக்கொன்று இருப்பது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மும்பை ரெயில்வே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இறந்த பயணிகள் விவரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை