கேரளாவில் சோகம் செல்பி எடுக்கும் போது புதுமணத் தம்பதி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!

அட்மின் மீடியா

0

 கேரளாவில் ஆற்றின் அருகே செல்பி எடுக்கும் போது  புதுமண தம்பதி கால் தவறி ஆற்றுக்குள் விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவருடைய மனைவி நவுபியா. கடந்த ஒரு வாரத்திற்கு முன் தான் இவர்களுக்கு திருமணம் முடிந்தது. புதுமண தம்பதியான இந்த ஜோடி பள்ளிக்கால் பகுதியில் உள்ள தங்கள் உறவினராக அன்சில் என்பவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளார்கள்

மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் அருகே உள்ள ஆற்றுக்கு  அன்சில் குடுமத்துடன் சென்றனர்.அப்போது புதுத்தம்பதிகள் ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று செல்பி எடுக்க ஆசைப்பட்டு  கால்தவறி  ஆற்றுக்குள் தவறி விழுந்தனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் காப்பாற்ற  குரல் எழுப்பினர். உடனே அன்சில் அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் ஆற்றில் ஆனால் அவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரின் உடலை மீட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.