அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவு சாலை கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட
ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்த 17
பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது இன்று அதிகாலை திடீரென கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மேலும் 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
மேலும் உயிரிழந்தவர்களில் 2 தமிழர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் எனவும், அவர்கள் இருவரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிஎம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
மீட்பு பணி வீடியோக்கள்:-
https://twitter.com/nabilajamal_/status/1686250582850555904
https://twitter.com/TOIMumbai/status/1686245862786396160
https://twitter.com/HTMumbai/status/1686260133884764160
https://twitter.com/drmonicajagtap/status/1686237835341201408