ஹரியானாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியில் கலவரம் 144 தடை உத்தரவு முழு விவரம்





அட்மின் மீடியா

0

ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பேரணியில் பங்கேற்றவர்களில் பலர் காயம் 2 போலிசார் உயிரிழப்பு,144 தடை உத்தரவு .இணையச் சேவை துண்டிப்பு


ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது.  ஹரியானாவில் உள்ள குருகிராம் அடுத்துள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா குருகிராம் சிவில் லைன்ஸில் இருந்து பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் கேத்லா மோட் அருகே யாத்திரை சென்று கொண்டிருந்த போது,  இரு தரப்பிற்கும் இடையில் மோதல் உருவானது. கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஊர்வலத்தில் பங்கேற்ற கார்கள் பேருந்துகள் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த பகுதி முழுதும் போர்களமாக காட்சி அளித்தது.

அவர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை ஒடுக்க முயற்சித்தனர். திடீரென வன்முறையாளர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கினர்.அதில் ஹோம் கார்டு ஜவான் ஒருவர் உயிரிழந்தார். டி.எஸ்.பிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் பல போலீசார் காயமடைந்துள்ளனர். 

நூ சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.