அட்மின் மீடியா
0
ஆகஸ்டு 3 ம் தேதி 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா….
நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை:-
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் தமிழக அரசின் சார்பில் மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஆகஸ்டு 3 ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாளாக செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை:-
திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-ஆவது நினைவு நாளான 3.8.2023 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 26ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை:-
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வருகிற 12ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை:-
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.