கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கிரேன் மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்!

அட்மின் மீடியா

0

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது  வயது 23 என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி உயிரிழந்த சோகம்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது  வயது 23 என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது  அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற கிரேன் ஒன்று சாலை தடுப்பில் மோதி அருகில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் வந்த பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது (23) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அந்த பகுதியில் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று கார் மீது மோது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் அப்புறப்படுத்தாமல் அங்கேயே இருந்துள்ளது, 

அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற கிரேன் ஒன்று சாலை தடுப்பில் மோதி அருகில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் வந்த பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது (23) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று அந்த சாலையில்  விபத்து நடந்த அந்த காட்சியை பார்த்தபடி கிரேன் டிரைவர் சென்றதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பனையூர்பகுதியில் விபத்து ஏற்படுவதால் சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.