20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு

அட்மின் மீடியா

0

நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்துள்ளது

இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள் 

உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள், 

மேற்கு வங்கதில் 2 பல்கலைக்கழகங்கள், 

ஆந்திரத்தில்  2 பல்கலைக்கழகங்கள், 

கா்நாடகத்தில் 2 பல்கலைக்கழகங்கள், 

மகாராஷ்டிரத்தில் 2பல்கலைக்கழகங்கள்,  

கேரளத்தில்  ஒரு பல்கலைக்கழகம் 

போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறுகையில், ‘யுஜிசி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பல பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவது யுஜிசியின் கவனத்துக்கு வந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது. அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தவொரு பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு3hr12 sharesபுதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் உள்பட நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்தது.இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கா்நாடகம், மகாராஷ்டிரம், கேரளத்தில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறுகையில், ‘யுஜிசி சட்டப் பிரிவுகளுக்குப் புறம்பாக பல பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவது யுஜிசியின் கவனத்துக்கு வந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது. அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தவொரு பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்தாா்.