சுதந்திர தினவிழா ஒத்திகை சென்னையில் இந்த இடங்களில் போக்குவரத்து தடை முழு விவரம்

அட்மின் மீடியா

0

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 76 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவார். 

அத்துடன் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்புக்களை ஏற்றுக் கொள்வார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 4 ,10, 13 தேதிகளில் நடைபெற உள்ளன.

சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்வுக்காக 4ம் தேதி, 10 மற்றும் 13ம் தேதிகளில்

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 4, 10 மற்றும் 13ம் தேதிகளில் காலை 7 மணி முதல் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், நேப்பியர் பாலம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலைகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு!

ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ராஜாஜி சாலையிலும் , காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேப்பியர் பாலத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமர சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.