அட்மின் மீடியா
0
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி, 15.08.2023 சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2023 சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கிராம சபை கூட்டம் நிகழ்ச்சிகளை பதிவு செய்திடும் பொருட்டு பார்வை4-ல் காணும் இவ்வியக்கை கடிதத்தின் வாயிலாக, தெரிவித்தவாறு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட GS-NIRNAY கைபேசி செயலியை பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 15.08.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 18.08.2023- க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணைப்பு: கிராம சபைக் கூட்டப் பொருள்கள்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும், கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம்,நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு
1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விவாதித்தல்
2. குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்
3. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
4. அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி :
5. சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு ‘எழில்மிகு கிராமம்’ என்ற சிறப்பு பிரசாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல்.
6. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல் குறித்து விவாதித்தல்,
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டம்: எதற்காக..! ஏன்..! நடத்தப்படுகிறது..! உங்களின் உரிமை என்ன?..!!