முஸ்லீம் எக்ஸ்பிரஸ் ரயில் என பரவும் தவறான தகவல் உண்மை என்ன முழு விவரம் Halkatta shareef special train





அட்மின் மீடியா

0

முஸ்லீம் எக்ஸ்பிரஸ் ரயில் என பரவும் தவறான தகவல் உண்மை என்ன முழு விவரம்

ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயிலை முஸ்லிம் எக்ஸ்பிரஸ் என ஜிஹாதிகள் உருவாக்கினர். வாகனம் இப்படி போகாது என்று காவலாளி சொல்லிக்கொண்டிருக்கிறான், ஆனால் வாகனத்தை இப்படித்தான் அனுப்ப வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். என்ன மனநிலை இது? இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா? நடு -சைடு இடது காரர்கள் இதற்கு பதில் சொல்லுவார்களா?  என ஓர் வீடியோ செய்தியினை பலரும் வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர் என பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவுடன் வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது ஆகும்

பொதுவாக இந்திய ரயில்வேயில் பயணிகள் ரயில் போல் சிறப்பு ரயில் சேவைகள் , சுற்றுலா ரயில் சேவைகள், ஆன்மீக  ரயில் சேவை என பல  ரயில்கள் இயக்கப்படுகின்றது

எடுத்துக்காட்டாக:-

இராமாயண யாத்திரை ரயில் GANGA RAMAYAN YATRA

DIVYA DAKSHIN YATRA WITH JYOTIRLINGA

MATA VAISHNODEVI WITH UTTAR BHARAT DARSHAN

KASHI-GAYA PAVITHRA PIND DAAN YATRA

BHAVYA RAMAYANA YATRA

DIWALI GANGA SNANA YATHIRAI

PURI GANAGASAGAR WITH DIVYA KASHI-AYODHYA-PRAYAGRAJ

என பல்வேறு சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றது

அதே போல் கர்நாடகாவில் உள்ள இ-காதீர் ஹஸ்ரத் க்வாஜா சையத் முகமது பாஷா காத்ரியின் 46-வது ஆண்டு நினைவு தினத்திற்காக ஹைதராபத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள ஹல்கட்டா ஷெரீப் தர்காவிற்கு விடப்பட்ட சிறப்பு ரயில் ஆகும்

காதீர் ஹஸ்ரத் க்வாஜா சையத் முகமது பாஷா காத்ரி

கர்நாடகாவில் உள்ள முகமது பாட்ஷா காத்ரி ஓர் சூஃபி துறவி ஆவார்,  இந்தியாவில் அவர் உலகளாவிய சகோதரத்துவத்தையும் அமைதியையும் போதித்தார்.Badesha Quadri, இந்தியாவின் கர்நாடகா, ராய்ச்சூரில், துல் ஹிஜ்ஜாவின் 10 வது நாளில், வெள்ளிக்கிழமை (1903) அன்று, யேமனில் இருந்து வந்த ஒரு சயீத் குடும்பத்தில் பிறந்தார். 

அவரது குடும்பம் முஹம்மதுவின் முதல் பேரனான ஹசன் இப்னு அலியின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே, படேஷா குவாத்ரி, சிஸ்தி பிரிவைச் சேர்ந்த அவரது தந்தைவழி மாமா ஷா நபி மொகிதீன் குவாட்ரியின் சீடரானார், 

அவர் அப்போது புகழ்பெற்ற சிஸ்தி மூத்தவராக இருந்தார். பின்னர் அவர் ஹஸ்ரத் ஷேக் கரிமுல்லா ஷா காத்ரியின் சீடரானார். கரிமுல்லா இறப்பதற்கு முன், காதிரியா மற்றும் சிஷ்டி மரபுகளின் தலைமைப் பொறுப்பான பீர் பாத்திரத்தை படேஷா குவாத்ரிக்கு வழங்கினார்.அவர் 1978 இல் காலமானார். அவரது மகனும் வாரிசுமான ஹஸ்ரத் சையத் இப்ராஹிம் ஷா காத்ரி அங்கு அவரது பணியைத் தொடர்கிறார். 

சிறப்பு ரயில் :-

கர்நாடகாவில் உள்ள ஹல்கட்டா ஷெரீப் தர்காவிற்கு செல்லும் பக்தர்களுக்காக ஆண்டு தோறும் இந்த்யன் ரயில்வே சிறப்பு இரயில் இயக்கி வருகின்றது.அந்த சிறப்பு ரயில் அலங்காரப்படுத்தப்பட்டு இருக்கும் வீடியோ தான் அது 

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://www.youtube.com/watch?v=rnJFekEtqhg

https://www.youtube.com/watch?v=SMXCUkbGZLA

https://www.youtube.com/shorts/N4AaJR9x5b4

https://www.youtube.com/watch?v=akXYHYu45ok