வரதட்சனை கொடுமை புகார் மீது FIR பதிவு செய்வது குறித்து தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் கடிதம்

அட்மின் மீடியா

0

வரதட்சனை கொடுமை புகார் பதிவு குறித்து தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் 

  • புகார் மீது வழக்கு பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவரின் பெயரை மட்டும் சேர்க்க வேண்டும். குடும்பத்தினர் பெயர்களை ‘மற்றும் பலர்’ என குறிப்பிட வேண்டும்
  • புகார்களை பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவர் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். 
  • வழக்குகளில் தேவையின்றி போலீஸ் கைது செய்யக்கூடாது
  • தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்

வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் படி தமிழக டிஜிபிக்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் 

வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவரின் குடும்பத்தினர் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் விசாரணைக்கு பிறகு  குடும்ப உறுப்பினர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவரும் போது அவர்கள் பெயரை முதல் தகவல் அறிவிக்கையில் சேர்க்கலாம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்