கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழப்பு! முழு விவரம்





அட்மின் மீடியா

0

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தஸ்தகீர்-திருமதி அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை முகமது மாஹீர் கடந்த ஜூன் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலையில் நீர் இருப்பதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், மருந்து செலுத்துவதற்காக, வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

29.6.2023 அன்று குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து செவிலியர்களிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்து

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.அக்குழுவின் அறிக்கையின்படி, pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.