அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

அட்மின் மீடியா

0

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும்; செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் 3-வது நீதிபதியாக கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்

இருதரப்பும் வாதங்களை நிறைவுசெய்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில்செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் எனவும்  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் ஏதும் இல்லை மேலும்  கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என   செந்தில் பாலாஜி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் மேலும் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது