அட்மின் மீடியா
0
சந்திரயான்-3 எடுத்து அனுப்பிய நிலவின் மிகவும் துள்ளியமான வீடியோ நீங்களே பாருங்க
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் கடந்த மாதம் 14 ம் தேதி சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் 3-ன் அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது. நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் தெரிவித்தார்
சந்திரயான்-3 விண்கலம் ஆக.23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்
இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. நேற்று முதல்புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது.
சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்திராயன் 3 எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ
சந்திரயான் விண்கலம் வீடியோ
https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681