அட்மின் மீடியா
0
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை காவல் ஆணையர் மயில்வாகணன் உத்தரவு
இந்தியாவில் 80% இந்துக்கள், மற்ற 20% மட்டுமே முஸ்லீம், கிறிஸ்துவர்கள். யாரு மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள். ஆகையால் இது போன்ற பாடல்களை எல்லாம் பரப்பாதீர்கள், இங்கு ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்” என மதத்தை குறித்து அவதூறு பரப்புமாறு பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சர்ச்சையாக பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்டோபர் என்பவருடன் மத வெறுப்புணர்வுடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், வாட்ஸப் குழு ஒன்றில் கிறிஸ்டோபர் என்ற நபர் கிறிஸ்துவ பாடலை பதிவிட்டதாக கூறப்படுகிறது.அதற்கு பதிலளித்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்,
கிறிஸ்டோபர் இந்த பாடலை கேட்டேன்; இது போன்ற பல பாடல்கள் உள்ளன. அதில் சிறு தண்ணீரை கிறிஸ்தவர்கள் மீது தூக்கி எறிந்தால் முடவர்கள் எழுந்து நடப்பார்கள் எனக் கூறுவார்கள். அது போன்று நடக்குமா? எனவே இது போன்ற பாடல்கள் எல்லாம் நீங்கள் போடக்கூடாது கிறிஸ்டோபர்,
இது இந்திய நாடு ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்து விட்டு நாங்கள் கோவில் கட்டி உட்கார்ந்து உள்ளோம். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்போம். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள். இங்கு முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி அப்படி எங்கேயாவது போய் படியுங்கள், மதப் பிரச்சினைகளை உண்டு பண்ணாதீர்கள். நாங்கள் 80 சதவீதம், நீங்கள் இருவரும் 20 சதவீதம் யாரு மெஜாரிட்டியோ அவர்களால் தான் ஆட்சி நடத்த முடியும்.இந்த மாதிரி பாட்டு போட்டால் நானும் அதிகமாக போடுவேன் என மிரட்டும் தோணியில் பேசி உள்ள ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பொறுப்புடன் இருக்க வேண்டிய காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், மதம் தொடர்பான கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இந்திய காவல் படை அவர்களின் உத்தரவின் பேரில், ராஜேந்திரனை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆடியோ கேட்க:-
https://twitter.com/Saran69041939/status/1688470674980118528