அட்மின் மீடியா
0
மத்தியபிரதேசத்தின் இந்தூர் அருகே, சிம்ரோல் பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியையொட்டி நிறுத்தப்பட்ட கார் திடீரென மேல் இருந்து நீர்வீழ்ச்சியின் கீழேவிழுந்தது. அந்த காரில் 13 வயது சிறுமியும், அவரது தந்தையும் வெளிவர முடியாமல் சிக்கித்தவித்த நிலையில், அருகிலிருந்தவர்கள் விரைந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், அலட்சியமாக நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் கார் நிறுத்தப்பட்டதும், காரில் ஹேண்ட் பிரேக் போடாமல் இருந்துள்ளது, மேலும் காரின் பின்பகுதியை வேகமாக மூடியதால் ஏற்பட்ட அதிர்வில் கார் தண்ணீரில் விழுந்ததும் தெரிய வந்தது.
இது பற்றி வெளியான தகவலில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலாவிற்கு அங்கு
சென்றிருந்தார். அவர் தனது காரை நீர்வீழ்ச்சியின் மேல் உள்ள பாறைகளில் காரை
நிறுத்தியுள்லார், காரின் டிக்கியில் இருந்து உணவை எடுத்துக்கொண்டிருந்தபோது,
கார் முன்னால் சென்று 15 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
வீடியோவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நீர் வீழ்ச்சியில்
விழுகிறது. அங்குள்ள சுற்றுலா பயணிகள் பதற்றத்துடன் கத்துகின்றனர். கார்
உள்ளே இருந்து சிறுமியின் குரலும், அவரது தந்தையின் குரலும் கேட்கிறது.
கார் வேகமாக அருவியில் விழுகிறது.
அருகில்
இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றினர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-