போலியான IRCTC Rail Connect செயலி போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் இந்திய ரயில்வே எச்சரிக்கை IRCTC Warns Users Of Fake Rail Connect App

அட்மின் மீடியா

0

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனப்படும் IRCTCயின் பெயரில் போலி செயலிகள் இருப்பதாகவும், இதை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற பெயரிலான செயலியை கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தில் ஆப் ஸ்டோர் ஆகிய இடங்களில் நேரடியாக சரிபார்த்து தரவிறக்கம் செய்து கொள்வது அவசியம். மாறாக முன்பதிவு அவசரத்தில் மூன்றாம் நபர்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் இணைப்புகளை நம்பி, செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இதன்படி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி இருப்பு வரை களவு போகவும் நேரிடலாம்.எனவே, ஐஆர்சிடிசி செயலியை தரவிறக்கம் செய்வதில் பொதுமக்கள் கவனமாக செயல்படுமாறு கோரப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் IRCTC Rail Connect போலியாக பல உள்ளதாகவும், இந்த செயலிகள் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு பலமுறை அதன் உண்மை தன்மையை சோதனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ ரெயில் கனெக்ட் மொபைல் ஆப்ஸை மட்டுமே பயன்படுத்தவும், 

ஆன்லைன் டிக்கெட் மற்றும் பிற ரயில்வே சேவைகளை பெறும் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தெரிவித்துள்ளது. 

இதுமட்டும் இல்லாமல் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட https://irctc.co.in இணையதளத்தில் IRCTC வாடிக்கையாளர் சேவையை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல் மற்றும் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.