ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் flying kiss புகார் rahul gandhi

அட்மின் மீடியா

0

இந்திய பாராளுமன்றத்தில் இன்று எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். 

 

ராகுல் காந்தி பேசியது:-

நான் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஒற்றுமைப் பயணம் முடிவடையவில்லை.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்றபோது விவசாயிகளை நேரடியாக
சந்தித்தேன். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

நான் மணிப்பூர்
சென்றேன். ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. மணிப்பூர் இரண்டாக
பிரிந்து கிடக்கிறது.  நீங்கள் இந்தியாவை கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் துரோகிகள்,
தேசப்பக்தர்கள் அல்ல. மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடியும்.
ஆனால் அதைச் செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை. நீங்கள் நாட்டையே எரிக்க
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா என
தொடர்ந்து கொண்டிருக்கிறது” என கடுமையாக சாடினார்.

அதன் பின்பு பேசிய ஸ்மிருதி இரானி, 

ராகுல்காந்தி வெளியே செல்லும்போது பெண் உறுப்பினர்கள் இருக்கும் பகுதியை
நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

அதன் பின்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் 21 பேர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். 

21 பேரும் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை சபாநாயகரின் அலுவலகத்தில் ஷோபா கரந்த்லாஜே சமர்ப்பித்தார்.

அந்த கடிதத்தில் 

மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது
ராகுல்காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பாஜக பெண்
எம்.பி.க்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

மக்களவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்தது மட்டுமல்லாமல், அவையின் கண்ணியத்தை குறைத்த ராகுல் காந்தியின் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் கூறி உள்ளனர்.