சென்னையில் பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய 9 வயது சிறுமி – மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் உங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா

0

சென்னை அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம். மாடு முட்டியதில் சிறுமி படுகாயம்  பள்ளி முடிந்து சென்ற போது நேர்ந்த சோகம். 

 

சென்னையில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை சாலையில் சென்ற மாடு முட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் நேற்று 09 ம் தேதி  சென்னை அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் நடந்துள்ளது

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானுவின் மகள் ஆயிஷா வயது 9 இவர் 4 ம் வகுப்பு படித்து வருகின்றார், இவர் நேற்று வழக்கம் போல பள்ளியை விட்டு தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி கீழே வீசியது. மேலும் கீழே விழுந்த ஆயிஷாவை மாடு விடாமல் தனது கொம்பால் குத்தி கொண்டே ருந்தது குழந்தையின் அலறல் சத்தமும் தாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மாட்டை  துரத்தி உள்ளனர்.

உடனடியாக காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் .இது குறித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன் பின்னர் சாலையில் கவனகுறைவாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளர் மீது போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலிசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் பல்லாவரம் பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற மாட்டின் மீது பைக்கில் வந்த தம்பதி மோதி, கணவரின் கண்முன்னே மனைவி லாரி ஏறி தலை நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சாலையில் சென்ற சிறுமியை மாடு குத்திய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/mahajournalist/status/1689498279250399233