வாட்ஸ் அப் மூலம் பஸ் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி எப்படி முழு விவரம் redBus WhatsApp

அட்மின் மீடியா

0

ரெட்பஸ் என்பது இணைய வழிப் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் சேவை வழங்கும் வலைத்தளம் ஆகும் . இவர்களின் சேவை இந்தியாவில் மட்டும் உள்ளது. இவர்களின் அலுவகங்கள் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், அகமதாபாத் போன்ற நகரங்களில் அமைந்துள்ளது.

மேலும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் முன்பதிவு செய்ய பொதுமக்கள் பெரும்பாலும் இந்த ரெட் பஸ் இணையதளத்திலும் , அல்லது ரெட்பஸ் செயலியிலும் முன்பதிவு செய்வார்கள்

இந்நிலையில் ரெட்பஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வழியாக பஸ் டிக்கெட் புக்கிங் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்ஸ்அப் வழியாக ரெட்பஸ் டிக்கெட் புக் செய்வது எப்படி?

8904250777 என்ற எண்ணை உங்களது மொபைல் போனில் சேவ் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் வாட்ஸ் அப் ஓப்பன் செய்து அந்த எண்ணில் “Hi” என மெசேஜ் அனுப்பவும்.

அடுத்து வரும் பதிவில் நீங்கள் மொழியினை தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் “Book Bus Ticket” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்

அடுத்து எந்த தேதியில் செல்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.

அதன் பின்பு  ஏசி (AC) மற்றும் ஏசி அல்லாத (NON AC) பேருந்துகளின் பட்டியல் உங்களுக்கு தோன்றும். 

அதில் அந்த பேருந்து புறப்படும் நேரம் மற்றும் இடம், சென்று சேரும் இடம் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பேருந்துகளில் உங்களது பட்ஜெட்டுக்கும், நேரத்துக்கும் ஏற்ப இருக்கும் பேருந்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து கட்டணத்தை செலுத்தவும்

யுபிஐ மூலமாகவும் நீங்கள் கட்டணத்தை செலுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.கட்டணம் செலுத்தியதும் உங்களது வாட்ஸ் அப்பிற்கு இ-டிக்கெட் மற்றும் நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்ததை உறுதி செய்யும் மெசேஜ் அனுப்பப்படும்.