சட்டங்களில் ‘இந்தியா’என்று இருப்பதை ‘பாரத்’ என்று மாற்றும் மசோதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை





அட்மின் மீடியா

0

சட்டங்களில் ‘இந்தியா’என்று இருப்பதை ‘பாரத்’ என்று மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

காலனியத்தின் தளைகளில் இருந்து விடுவிக்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் மறுகாலனியாக்கம்

பாரதீய நியாய சன்ஹிதா, பாரதீய நாகரிக் சன்ஹிதா, பாரதீய சாக்க்ஷ்ய சன்ஹிதா என்ற பெயர்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டுவந்துள்ள சட்ட வரைவுகளில் மொழியாதிக்கத்தின் முடைநாற்றம் எடுக்கின்றது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் அராஜக முயற்சி ஆகும். இந்திய ஒற்றுமையின் அடிப்படையையே இது அவமதிக்கிறது. பாரதீய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இனித் ‘தமிழ்’ என்று உச்சரிக்கக் கூட தார்மீக உரிமை இல்லை.

வரலாற்றில் இப்படி எத்தனையோ அடக்குமுறைகளால் புடம்போடப்பட்டு, அடக்குமுறைகளை எதிர்ப்பதில் முன்கள வீரர்களாக நிற்பவைதான் தமிழ்நாடும் – தி.மு.கழகமும். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், எமது மொழி அடையாளத்தைக் காப்பது என இந்தித் திணிப்பின் கொடும்புயலை எதிர்கொண்டவர்கள் நாங்கள். மீண்டும் அசைக்கமுடியாத உறுதியுடன் அதனை எதிர்கொள்வோம்.

இந்தி காலனியாக்கத்துக்கு எதிரான தீ மீண்டும் ஒருமுறை பரவுகிறது. எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும்.

Recolonisation in the name of Decolonisation!

The audacious attempt by the Union BJP Government to tamper with the essence of India’s diversity through a sweeping overhaul – Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Sakshya Bill – reeks of linguistic imperialism. This is an affront to the very foundation of INDIA’s unity. BJP and Prime Minister Modi have no moral right to even utter the word Tamil hereafter.

In the crucible of history, Tamil Nadu and DMK have emerged as the vanguards against such oppressive overtones. From the Anti-hindi agitations to safeguarding our linguistic identity, we have withstood the storm of Hindi imposition before, and we shall do it again, with unyielding determination.

The fire of resistance against Hindi Colonialism is ablaze once more. The BJP’s audacious bid to supplant our identity with Hindi will be opposed resolutely.