அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் மட்டும் இல்லாமல் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் எனும் நல்நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தோற்றுவிக்கப்பட்டு ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் ஒரு சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது.
பால் வகைகள்:
சமன்படுத்திய பால் – (TM) 3.0% கொழுப்பு; 8.5% இதரச் சத்து
நிலைப்படுத்தியப் பால் – (SM) 4.5% கொழுப்பு; 8.5% இதரச் சத்து
நிறைகொழுப்புப் பால் – (FCM) 6.0% கொழுப்பு; 9% இதரச் சத்து
இருநிலை சமன்படுத்தியப் பால் – (DTM) 1.5% கொழுப்பு; 9% இதரச் சத்து
ஆவின் டீ மேட்- (Teamate) 6.5% கொழுப்பு; 9.5% இதரச் சத்து பால்
பொருட்கள்: நெய், வெண்ணெய், மோர், தயிர், லஸ்ஸி , யோகர்ட், குலாப்ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா, பலவித நறுமணப்பால் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற ஏறத்தாழ 150 வகைப்பட்ட பால் பொருட்கள். விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது
நீல நிறம் ஆவின் பால் பாக்கெட்
ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் ஒரு பால் பாக்கெட்டில் 3 % கொழுப்பு உள்ளது.
பிங்க் ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் பிங்க் ஆவின் பால் பாக்கெட்டெல் 1.5 % கொழுப்பு உள்ளது. இதை டையட் பால் பாக்கெட் என்று அழைக்கிறார்கள். இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் ஆகும்.
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 4.5 % கொழுப்பு இருக்கும். இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர்.
பழுப்பு நிற ஆவின் பால் பாக்கெட்500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 6 % கொழுப்பு இருக்கும். இதுவே முழுக் கொழுப்பு செறிந்த பால் ஆகும்.
இந்நிலையில் 5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று முதல் பாக்கெட்டிற்கு ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரு.210 க்கு விற்கப்பட்டு வந்த பச்சை பால் இனி ரூ.220க்கு விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வால் கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ, காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.