ஒரே வாட்ஸப்பில் 2 அக்கவுண்ட் பயன்படுத்தலாம் புதிய அப்டேட் அதிகாரபூர்வ அறிவிப்பு





அட்மின் மீடியா

0

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்

அந்த வகையில், வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில், பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வந்த ‘மல்டி அக்கவுண்டு’ அம்சத்தை வாட்ஸ் அப் செயலி சோதனை முயற்சியாக துவங்கியுள்ளது. 

மல்டி லாகின் வசதி:-

தற்போது ஒரு வாட்ஸப்பில் நாம் ஒரு அக்கவுண்ட் மட்டுமே உபயோகபடுத்த முடியும், அப்படி நமக்கு 2 வாட்ஸப் வேண்டும் என்றால் நாம் வாட்ஸப் பிசினஸ் அல்லது வாட்ஸப்பை குளோன் செய்து பயன் படுத்தி வருகின்றோம்

இந்நிலையில் வாட்ஸப்பின் புதிய அறிவிப்பின் படி ஒரே வாட்ஸப்பில் ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ளும் படியான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

தேவையின் போது பயன்படுத்தி விட்டு தேவையில்லாத போது Logout செய்து கொள்ளலாம்

இதன்மூலம் பயனர்கள் ஒரே சாதனத்தில் பல்வேறு வாட்ஸ் ஆப் கணக்குகளை இணைத்து ஸ்விட்சு செய்து பயன்படுத்த முடியும்.ஏற்கனவே இந்த அம்சம் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த புதிய அப்டேட் whatsapp பீட்டா வர்சனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது  விரைவில்  அனைத்து பயன்களும் இந்த அப்டேட்டை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.