மலப்புரத்தில் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல் கிராபிக்ஸ் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் கைது வீடியோ இணைப்பு





அட்மின் மீடியா

0

மலப்புரத்தில் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல் கிராபிக்ஸ் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் கைது வீடியோ இணைப்பு

சினிமா வசனங்களைப் பேசி மலப்புரம் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல் கிராபிக்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்

இன்ஸ்டா ரீல்சில் மலையாள திரைப்பட வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்து 4 இளைஞர்கள் பேசி கொள்கின்றார்கள் , அதன் பின்பு ஓர் இளைஞன் வெடிகுண்டை வைத்துவிட்டு ஒரு பையுடன் ஸ்லோ மோஷனில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே செல்வதையும், அதைத் தொடர்ந்து வெடிச்சத்தம் நடந்ததையும் வீடியோ காட்டுகிறது. காவல் நிலையத்தில் உள்ள பலகையில் மேலட்டூர் என்பது தெளிவாகத் தெரியும். இந்த வீடியோ வைரலானது, வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள் அசல் தோற்றத்தில் உருவாக்கப்பட்டன. 

அதனை தொடர்ந்து அந்த வீடியோ வெளியிட்ட கருவரகுண்ட் புன்னக்காட்டை சேர்ந்த முஹம்மது ரியாஸ், சல்மானுல் பாரிஸ், முஹம்மது ஜாசிம், சலீம் ஜிஷாதியான், முகமது பவாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலட்டூர் காவல்நிலையத்தில் வெடிகுண்டு கிராபிக்ஸ் உதவியுடன் செய்யப்பட்டது. காவல்துறையை அவதூறு செய்ததாகவும், சமூக வலைதளங்கள் மூலம் கலவரத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Forumkeralam2/status/1690396332648026112/video/1