மாமல்லபுரத்தில் கொலை மிரட்டல் புகாரில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது

அட்மின் மீடியா

0

மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த சக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் அங்கு சுற்றுலா வரும் பயனிகளுக்கு பாசி மணி, ஊசி மணி, விற்று வருகின்றார், இநிலையில்  கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றார். அங்கு அவர் வெளியனுப்பபட்டார், இதையடுத்து அந்த கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே. சேகர் பாபு அஸ்வினியுடனும் மற்ற நரிக்குறவ சமூகத்தினருடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்தநிலையில்  மாமல்லபுரத்தில் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. அங்கு நாடோடி பழங்குடியின சமூகத்தினர் ஊசிமணி, பாசிமணி விற்று வருகிறார்கள். அவ்வாறு விற்பனை செய்த போது நந்தினி என்ற பெண்ணுடன் அஸ்வினி தகராறு செய்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியபோது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கையில் கிழித்ததாக புகார் அளித்துள்ளார்.நந்தினியின் புகாரின் பேரில் அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.