செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகம் சிறப்பம்சங்கள் முழு விவரம் Jio AirFiber

அட்மின் மீடியா

0

 ஜியோ ஏர்ஃபைபர் அதி வேக இண்டர்நெட் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 19ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்!!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 46 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

அப்போது, வீடியோ கான்பரன்சஸ் மூலம் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உரையாற்றினார் அப்போது செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, ஜியோ AirFiber எனப்படும் வயர்லெஸ் அதிவேக இணைய சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் AirFibre மூலம், ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 1,50,000 இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாகவும், ஜியோவின் நெட்வொர்க்கை 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது.

ஜியோ ஏர்ஃபைபர் சிறப்பம்சங்கள்:-

ரிலையன்ஸ் ஜியோவின் ஏர் ஃபைபர் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவையை வழங்கும் 

இதுவரை எந்த நிறுவனமும் அளிக்காத அளவுக்கு அதிவேகமான இணையத்தை இதன் மூலம் பயன்படுத்த முடியும். 

பொதுவாக பைபர் சேவையை பயன்படுத்துவதற்கு கேபிள்கள் தேவையாக இருக்கும். ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அல்ட்ரா ஸ்பீட் இணைய சேவையை வழங்கவுள்ளது.

இதுநாள் வரையில் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்து வந்த Jio AirFiber திட்டம் தற்போது வீடுகளுக்கு வருகிறது.

Jio AirFiber-க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை. 

இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸ் இணைக்க முடியும். 

ரிலையன்ஸ் ஜியோ-வின் ஜியோ ஏர்ஃபைபர் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயாகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.