செப் 2 ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா விண்கலம் – நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி உடனே ஆன்லைனில் புக் செய்யுங்க aditya mission launch visiting pass online





அட்மின் மீடியா

0

  • ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி
  • https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதள முகவரியில், 29.08.2023 பகல் 12 மணி முதல் விருப்பமுள்ளோர் பதிவு செய்யலாம்.
  • சந்திரனை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய செப் 2 ம் தேதி விண்கலம் ஏவும் இஸ்ரோ

சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தியது. 

இந்நிலையில் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து ஆதித்யா எல் 1 திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர் 2-ல் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது 

இந்த விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து செப்.02ம் தேதி காலை 11:30 க்கு விண்ணில் செலுத்த உள்ளது. இந்த நிகழ்வை பொது மக்களும் காணலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இதனை காண விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி பகல் 12 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆன்லைனில் டிக்கெட் எடுப்பது எப்படி?

செப்டம்பர் மாதம் 2ம் தேதி இந்திய நேரப்படி சரியாக காலை 11:50 மணிக்கு விண்ணில் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் பாய்கிறது. 

அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து மக்கள் இந்த நிகழ்வை நேரடியாக கண்டு ரசிக்கலாம்

இதற்கான டிக்கெட் விலை எதுவுமில்லை இலவசம் தான் என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த லான்ச் கேலரியில் இருக்க முடியும் என்பதால் இதற்கு முன்பதிவு கட்டாயம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

புக்கிங் செய்தவர்கள் லான்ச் அன்று நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று அங்கு இருந்து ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களிக்கலாம் 

முகவரி:-

ஆந்திரா மாநிலம் அருகில் உள்ள ரயில் நிலையம்: சூல்லூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. 

சூல்லூர்பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வரையறுக்கப்பட்ட பொது/தனியார் போக்குவரத்து உள்ளது. 

குறிப்பு:-

ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்/அரசு வழங்கிய ஐடி, மொபைல் எண் & மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் என்பதால் தயாராக வைத்திருக்கவும்.

விண்ணப்பிக்க:-

https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

The realization works of Space Theme Park are under progress to enable the citizens of this nation to witness the launches taking place from the space port of India. The major attractions of Space Theme Park include: 

Rocket Garden 

All the beautiful ISRO launch vehicles – Sounding Rocket, SLV, ASLV, PSLV, GSLV, Mk-III models will be realised. Lawns will be developed along with photo points. Fountain will be realised at the middle of the rocket garden.

Launch View Gallery T

he Space Port of India, naturally attracts the visitors to witness the launch activities and cheer for the pride of our Nation. Launch view gallery would allow thousands of viewers to witness the launch. 

Space Museum 

Space Museum provides a tell-tale account of the Indian Space Programme from its infancy. The story of the Indian Space Programme is unfurled in six sections, comprising of history, education, technology, applications, global and the future. 

AT PRESENT THE LAUNCH VIEW GALLERY & SPACE MUSEUM IS OPEN TO PUBLIC , OTHER FACILITIES ARE UNDER PROCESS.