அட்மின் மீடியா
0
- வழக்கறிஞர் முன்னிலையில் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்
- சுயமரியாதை திருமணங்களைப் பலர் அறிய நடத்த வேண்டிய அவசியம் இல்லை
- வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்
- இந்து திருமண சட்டத்தின் 7ஏ பிரிவை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபத் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு
இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7A இன் படி சுய திருமண முறையை
அடிப்படையாகக் கொண்டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப்
பின்பற்றாமல் அல்லது ஒருவர் முன்பு சடங்கு இல்லாமல் தங்கள் நண்பர்கள்
அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து
திருமணம் செய்து கொள்ளலாம் என உள்ளது
என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் நடத்தி வைக்கும் இதுபோன்ற சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது.