சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்ட ஆதித்யா விண்கலம் அடுத்து என்ன நடக்கும் முழு விவரம்





அட்மின் மீடியா

0

செப்டம்பர் 2 ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஆதித்யா எல்1 விண்கலன் ஏவப்பட்டது,சூரியன் குறித்த ஆய்வுக்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு இந்தியா 

ஆதித்யா விண்கலத்தை விண்வெளிக்கு PSLV-C57  ரக ராக்கெட் பயன்படுத்தப்பட்டது மேலும் இந்த ஆதித்யா எல்1 விண்கலம்  வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது

ஆதித்யா-எல்1 இன்று முதல் சுமார் நான்கு மாதங்கள் பயணித்து பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் லக்ராஞ்சியன் புள்ளியில் நிலைகொள்ளும்.

பூமி என்றது ஒரு கிரகம் சூரியன் என்றது ஒரு நட்சத்திரம்,  இரண்டு சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும், அதில் மிக முக்கியமான ஒரு இடம்தான் லக்ராஞ்சியன் 

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. ஆனால் நாம் அனுப்பும் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு 15 லட்சம் கி.மீ தூரத்திலேயே நின்றுவிடும். 

அதாவது தற்போது நிலவு இருக்கும் தொலைவை விட 4 மடங்கு தூரத்தில் ஆதித்யாவை நாம் நிலை நிறுத்துகிறோம். அதேபோல சூரியனை பொறுத்த வரையில் இது 1 சதவிகித தூரம்தான்.

சூரியனின் வெப்பம் ஆதித்யா எல்1-ஐ தாக்கும். ஆனாலும் இதை எதிர்கொண்டு ஆய்வு செய்யும் வகையில் டைட்டானியம் தனிமத்தால் தான் ஆதித்யா விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரியனில் உள்ள கொரோனா எனப்படும் மேற்புற அடுக்குகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல்களை ஆய்வு செய்யவும் ஏழு கருவிகள் அதில் உள்ளது அந்த செயற்கைக்கோள் சூரியனை பார்த்துக் கொண்டிருக்கிற போல் நிலைநிறுத்தப்படும். மற்றொரு புறம் எப்பொழுதும் பூமியை பார்த்தபடி இருக்கும்.