பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை!

அட்மின் மீடியா

0

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது அரிவாள் வெட்டு, 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை என தகவல்கள் வெளியாகி உள்ளது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது வீட்டின் அருகே மர்ம நபர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது இதனை பார்த்த செந்தில்குமார் இங்கு மது அருந்த கூடாது என கூறியுள்ளார் அபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது போதையில் இருந்த நபர்கள் நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து
செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த செந்தில்
குமார் தம்பி மோகன் ராஜ், தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள்
ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தகவல் அறிந்து வந்த போலிசாரிடம் ஊர் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுக்க விடாமல் கொலையாளியை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்டதால் தான் கொலையா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வெட்டிகொலை செய்யப்பட்டதில் இறந்த மோகன்ராஜ் என்பப்வர் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.