அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தியின் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த தந்தி டிவி நியூஸ்கார்டு குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, புகைபடத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த தந்தி டிவி நியூஸ்கார்டு 30.08.2021 ஆண்டு வெளியிட்ட வீடியோ என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
2021 ம் ஆண்டு கொரானா உச்சம் பெற்று இருந்த காலகட்டம் ஆகும்,அப்போது ஊரடங்கு இருந்த காரணத்தால் பல தடைகள் இருந்தது , அன்றைய காலகட்டத்திற்க்கு அந்த விதிமுறைகள் அனைவரும் ஏற்றுகொண்டார்கள்,
மேலும் அந்த கட்டுபாடுகள் இந்த ஆண்டுக்கானது இல்லை, தற்போது 2023 ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை செப்டம்பர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருப்பதால் செப்டம்பர் 18ம் தேதியை விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு மாற்றி அரசானை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
2021 ம் ஆண்டு கொரானா கால கட்டத்தில் அறிவித்த கட்டுப்பட்டுகளை இந்த ஆண்டு போல் நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்