அட்மின் மீடியா
0
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி யில் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர் ஆஷா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.09.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக வரும் 23-ஆம் தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்றும்,
இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்வில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பார்வையாளர்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிப்பதகாவும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம் வரும் 11-ம் தேதி இயங்காது என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவு நாள் 11.9.2023 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுமுறை அளிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.