அட்மின் மீடியா
0
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது
ரூ.16 கோடி பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ரவீந்தரை கைது செய்தது காவல்துறை
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார்
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.அதில், .
கடந்த 2020-ம் ஆண்டு லிப்ரா புரொடக்சன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அவர் நகராட்சி திடக்கழிவுகளை மின் ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்தத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதனை நம்பி அந்த திட்டத்தில் 16 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால், அவர் கூறியது போல் பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர் மிரட்டல் விடுக்கின்றார் எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறி இருந்தார்
மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸர் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ரவீந்தரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.