நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்!





அட்மின் மீடியா

0

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த 28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னை திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால், நான் யாரிடமும் கூறவில்லை. 

அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். எனது அனுமதி இல்லாமலேயே, அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார்.மேலும், நான் சினிமாவில் நடித்து சேமித்து வைத்திருந்த ரூ.60 லட்சம் பணம் மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பெற்றுக்கொண்டார். 

இந்நிலையில், அவர் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக சீமான் மீது 2011-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சீமான் கட்சியை சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, என் வயிற்றில் இருந்த கருவை எனது அனுமதியின்றி கருச்சிதைவு செய்ததுடன், பணம், நகைகளை பறித்துக் கொண்டு, தற்கொலைக்கு தூண்டி, என் வாழ்க்கையைச் சீரழித்த சீமான் மீதும், அவரது தூண்டுதலின்பேரில் மிரட்டும் மதுரை செல்வம் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான தனிப்படை போலீஸார், சில தினங்களுக்கு முன்னர் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து,  விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின்பு திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், நேற்று காலை நடிகை விஜயலட்சுமியை போலீஸார்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை நடத்தினர். 

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!

அதில் விஜயலட்சமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என அதில் உள்ளது