கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை என பரவும் வீடியோ? உண்மை என்ன? canada ban the rss fake or real


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே என்ன நடக்கிறது?

கடந்த 3 நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்கள் அதிகரித்துள்ளது  சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பர் கடந்த 18 ம் தேதி கனடாவில் உள்ள வான்கோவரில் சீக்கிய கோயில் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் காலிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதம் ஏந்திய போராளி குழுவாக செயல்பட்டு வந்தார். மேலும் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்

இவர் கனடா நாட்டில் தஞ்சமடைந்து குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் கனடாவில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஜூன் 18-ம் தேதி இவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கனடா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதற்றம்:-

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்ட்களுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு புகார் கூறியது ஆனால் இந்திய அரசு தங்களுக்கு தொடர்பு இல்லை என  மறுப்பு தெரிவித்தது

மேலும் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டிற்கான வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஐந்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியாவில் வாழும் கனடா நாட்டு மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்திய அரசு அறிவிப்பு

இந்நிலையில் மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவிற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறோம். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொரான்டோ, வான்கோவர் நகரில் உள்ள துணைத் தூதரகத்தில்…தூதரகத்தில் பதிவுதங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை eன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

வீடியோவின் முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் அவர் என்ன சொல்கிறார்? தமிழாக்கம்

என்சிசிஎம் நான்கு கூடுதல் செயல்களுக்கு அழைப்பு விடுக்கிறது

1 இந்தியாவுக்கான கனடா தூதரை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

2.கனடாவுக்கான இந்திய தூதரை வெளியேற்றுவது.

3.விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடக்குதல்.

4.குற்றவியல் சட்டத்தின் கீழ் பட்டியல் விதிகளின் கீழ் RSS ஐ தடை செய்தல் மற்றும் அதன் முகவர்களை கனடாவில் இருந்து அகற்றுதல். என கூறுகின்றார்

உண்மை என்ன:-

கனடா அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு தடை விதித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை

மேலும் அது போல் இது வரை அறிவிக்கவில்லை.

வீடியோவில் பேசும் நபர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆவார் அவர் கனடா நாட்டின் அரசாங்க அதிகாரி இல்லை 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ The National Council of Canadian Muslims (NCCM)

கனடாவை சேர்ந்த முஸ்லிம் கவுன்சிலை சேர்ந்த ஸ்டீபன் பிரவுன் என்ற நபர் கனடா அரசுக்கு வைக்கும் கோரிக்கை தான் அது

கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) என்பது ஒரு சுயாதீனமான, கட்சி சார்பற்ற மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது கனடா மக்களுக்கு  மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கிறது, பாகுபாடு மற்றும் இஸ்லாமோஃபோபியாவை எதிர்க்கின்றது.

NCCM தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் NCCM மற்றும் கனடாவின் உலக சீக்கிய அமைப்பு (WSO) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் உரை நிகழ்த்தியதில் இருந்து சிறு பகுதியை மட்டும் பொய்யான தலைப்பு போட்டு ஷேர் செய்து வருகின்றார்கள்

கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் பேசிய முழு வீடியோ கீழே உள்ள லின்ங்கில் உள்ளது

முடிவு:-

நேஷனல் கவுன்சில் ஆஃப் கனேடியன் முஸ்லிம்ஸ் என்ற அமைப்பு விடுத்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, கனடா நாட்டு அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதித்துவிட்டது என தவறான தகவல் பரவுகின்றது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்