டெங்கிலிருந்து பாதுகாப்பது கொள்வது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா

0

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஆகும் இது நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி Aedes Aegypti என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `

ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டு இருக்கும்

இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா’ அல்லது `பிற காய்ச்சலா’ என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

மழை காலங்களில் அனைவருக்குமே  பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும்.

ஆனால்,  அதே சமயம் நம காய்ச்சல் டெங்கு காய்ச்சலோ என்று அச்சம் கொள்ள வேண்டாம் ஏனெனில்  அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல.

டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும்

டெங்கு பயம் இனி வேண்டாம்; மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்து விடுகிறது.

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றினால் ‘டெங்கு’ அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள்,பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன.

எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்

சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான வழிகள் இருக்கிறது. *நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும்.இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவிலும்,

மெடிக்கல் கடையிலும் வாங்கி பயன்படுத்தலாம்.

மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம்.

காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும்.

வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருந்துகளை தெளிக்கவும்.

கை கால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

தினசரி நிலவேம்பு கஷாயம் குடியுங்கள்.

டெங்கு காய்ச்சலை வராமல் பாதுகாப்போம்.

எனவே மேலே குறிப்பிட்ட வழிமுறை போல நாமும் சுத்தமாக இருப்போம்.