அக் 24 ம் தேதி முதல் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது WhatsApp to stop working on these Android phones





அட்மின் மீடியா

0

அக் 24 ம் தேதி முதல் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது

 

 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்
ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. 

 

இந்நிலையில்  தற்போது வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு போன்களில் ஓ.எஸ் 4.எஸ்-லும் (OS 4.x)
ஆப்பிள் போன்கிளில் ஐ.ஓ.எஸ்12 (iOS12) வெர்ஷனிலும்
செயல்படுகிறது.இந்நிலையில், ஆண்ட்ராய்டு 4.x (Android 4.x) மற்றும் அதற்கு
கீழான வெர்ஷன் போன்களில் செயல்படும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்துவதாக
கூறியுள்ளது. 

 

அதன்படி சில பழைய மாடல் போன்களில் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாட்ஸ்அப்
செயல்படாது எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அக்-24ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட
ஆண்ட்ராய்டு வெர்சன் கொண்ட சாதனங்களில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆண்ட்ராய்டு
வெர்ஷன் 5.0 விற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில்,
வாட்ஸ்அப் செயலி செயல்படாது.

உங்கள்
செல்போன்  எந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை, செட்டிங்
மெனுவில் சென்று பார்க்கலாம். அதற்கு செட்டிங் மெனுவில், ஜெனரல் மற்றும்
இன்ஃபர்மேஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் சாஃப்ட்வேர் என்பதை கிளிக்
செய்தால், அதில் ஆபரேடிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

உங்கள் போன் என்ன வெர்ஷன் என்பதை தெரிந்து கொள்ள போன் செட்டிங்க்ஸ் சென்று
‘About phone’ கிளிக் செய்து ‘Software information’ செக்ஷன் செல்லவும்.
இங்கு உங்கள் போன் வெர்ஷன் பற்றி அறியலாம்

 

எந்தெந்த போன்களில் செயல்படாது?

 

ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கும் குறைவான
வேகத்தில் இயங்கும் சில பழைய மாடல் போன்களில் கேலக்ஸி எஸ்2, எல்ஜி ஆப்டிமஸ்
ஜி ப்ரோ, மோட்டோரோலா டிராய்ட் ரேசர், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, சாம்சங்
கேலக்ஸி டேப் 10.1 மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் ஆகியவைகளில் செயல்படாது. 

1. Samsung Galaxy S2

2. HTC Desire

3. எல்ஜி ஆப்டிமஸ்

4.
Sony Xperia Arc

5. கூகுள் நெக்ஸஸ் எஸ்

மோடோரோலா Droid Razr

சோனி எக்ஸ்பீரியா எஸ்2

மோடோரோலா zoom

சாம்சங் கேலக்சி டேப் 10.1

ஆசஸ் ஈ பேட்