அட்மின் மீடியா
0
கலைஞர் 100 வினாடி வினா போட்டி! முதல் பரிசு 10 லட்சம் பங்கு பெறுவது எப்படி முழு விவரம்
மறைந்த திமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாளான செப் 15 ம் தேதி அன்று கலைஞர் 100 வினாடி வினா போட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.
பங்கேற்பாளர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் வினாடி வினாவில் பங்கேற்கலாம்
18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். பங்கேற்பாளர்கள் என அனைவரும் பங்கேற்க்கலாம்
வினாடி வினா மொத்தம் 3 சுற்றுகள் நடைபெறும்
1.முதல் சுற்று – இணையவழி வினாடி வினா
2.இரண்டாவது சுற்று – மண்டல போட்டி
3.மூன்றாவது சுற்று – அரையிறுதி & இறுதிப் போட்டி
முதல் சுற்று
போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படும் . அந்தந்த மண்டலங்களில் தேர்ச்சி பெறும்
சிறந்த போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அதில் தேர்ச்சி
அடைபவர்கள் அரை இறுதிக்கும், அரை இறுதியி ல் முன்னணி வகிக்கும் அணிகள்
இறுதி சுற்றுக்கும் நுழையும் வாய்ப்பையும் பெறும்.
பரிசு விபரம் :-
முதல் பரிசு – ரூ.10 லட்சம்
இரண்டாம்
பரிசு – ரூ. 6 லட்சம்
மூன்றாம் பரிசு – ரூ. 3 லட்சம்
மொத்தம் ரூ.35 லட்சத்துக்கு மேல் ரொக்கத் தொகை பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
போட்டியில் பங்கு பெற:-
https://kalaignar100.co.in/#/kalaignar100 என்ற இணையதளத்திற்க்கு செல்லுங்கள் அடுத்து அதில் போட்டியில் பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள்
முதலில் ஆன்லைனில் போட்டி வெற்றி பெற்ற பின்பு ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும்.
இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும். மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.அரையிறுதி: மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற பரிசுகள் உள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்குவார்.
போட்டியில் பங்கு பெற:-