அட்மின் மீடியா
0
பாண்டியன், வைகை, பொதிகை ரயில்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மதுரை – விழுப்புரம் இடையேயான விழுப்புரம் விரைவு ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு பதிலாக 3.35 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.12636) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்பட்டும்
சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.12635) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு 9.15 மணிக்கு வருவதற்கு பதிலாக 9.30 மணிக்கு வந்தடையும்.
மதுரை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.16722) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும்.
மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலானது (வ. எண்.12638)வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் இரவு 9.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படும்
சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலானது (வ.எண்.12662) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து 9.35 முதல் 9.55 க்கு புறப்பட்டு வந்த நிலையில் 9.35 முதல் 9.45 மணிக்குள் புறப்படவுள்ளது,