பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி உரிமையாளர் மீது வழக்கு பதிவு முழு விவரம்





அட்மின் மீடியா

0

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று இரவு மழை காரணமாக ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஊழியர் ஒரு பலியாகினார் மேலும், 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், முறையாக பராமரிக்காததாக இந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகியோர் மீது ஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேற்கூரை இரண்டு தூண்கள் மட்டுமே தாங்கி பிடித்திருந்தது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

சென்னையில் கனமழை பெய்து வருவதால் நேற்று சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் உள்ள ஓர் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தகவல் அறிந்து தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். 

சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

சரிந்து விழுந்த மேற்கூறையை பொக்லைன் இயந்திரத்துடன் அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில் விபத்து நடந்த பகுதியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.