சுற்றுலா சென்று திரும்பிய போது குன்னூரில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து- 8 பேர் பலி Coonoor Accident





அட்மின் மீடியா

0

தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் பலர் சுற்றுலா சென்றுள்ளார்கள் அந்த வகையில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்தது எப்படி:-

தென்காசி மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் நேற்று ஊட்டியில் சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் தென்காசிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியளவில் பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்தபோது குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள  50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. 

மீட்பு பணிகள்:-

விபத்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், தீயனைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 30 க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து குன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குன்னூர் விபத்தில் இறந்தோர் விவரங்கள்:-

குன்னூர் அருகே 100 அடி ஆழ பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

இதில் நிதின் (15), தேவிகலா (36), முருகேசன் (65), முப்புடாதி (67), கெளசல்யா (29), இளங்கோ (64), செல்வன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்:-

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

குன்னூரில் நடந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.​உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.