திடீர் என அமைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்.. அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா

0

அனுமதி இன்றி திடீர் என அமைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்.. அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

கோவை சூலூர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாந்த் இவர் சேரன் மாநகரில் கடை வைத்துள்ளார். 

இவர் வீட்டுக்கு செல்லும் வழியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.அங்கு திடீரென அனுமதி இல்லாமல் வேகத்தடை அமைக்கப்பட்டது.முன் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் சந்திரகாந்த்  இரவு 11 மணி அளவில் கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.அப்பொழுது கொடிசியா அருகே இவரது இரு சக்கர வாகனம் வந்த பொழுது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். 

இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கான குறியீடுகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் அங்கு இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரியாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, 

இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளது

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/TamildiaryIn/status/1708106156282171733