சென்னை மாரத்தான் போட்டி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம்

அட்மின் மீடியா

0

சென்னை மாரத்தான் போட்டி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மாரத்தான் நடைபெறுவதை ஒட்டி, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில், இன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி இரவு மாரத்தான் போட்டியின் 2ஆம் பாகம் வருகின்ற 02.10.2023 ஆம் தேதி அன்று மாலை 1600 மணிக்கு ஆவடி வேல்டேக் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. 

மேற்படி இரவு மாரத்தான் போட்டி 21 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இப்போட்டி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கி மீரூசூர் – வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி சுங்கச்சாவடி வரை 3 பிரிவுகளின் துாரத்தை கடந்து மீண்டும் வேல்டேக் பல்கலைக்கழகத்தில் முடிவடையும். 

மேற்படி போட்டியின் காரணமாக கனரக வாகனங்கள் 02.10.2023 அன்று மாலை 1600 மணிமுதல் 2200 மணிவரை கீழ்கண்ட மாற்று பாதையில் திருப்பிவிடப்படும்.

மீஞ்சூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலையில் வண்டலுார் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் செங்குன்றம் ஆர்.டி.ஓ பாலம் சேவை சாலை வழியாக தடா அல்லது புழல் வழியாக ஜீ.என்.டி சாலையில் திருப்பி விடப்பட்டு புழல் தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்,

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காந்தி நகர் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு 400 அடி வெளிவட்ட சாலை வழியாக மீஞ்சூர் அல்லது ஜீ.என்.டி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு புழல் – தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்.

தடாவில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஜி.என்.டி சாலையில் புழல் நோக்கி திருப்பி விடப்பட்டு திருப்பி விடப்பட்டு புழல் – தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்.

திருநின்றவூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலை நேக்கி வரும் கனரக வாகனங்கள் பட்டாபிராம் தண்டுறை பாலம் மற்றும் திருமணம் வழியாக 400 அடி வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர் செல்லலாம். 

ஓசிஎப் சாலையில் இருந்து வேல் டெக் நோக்கி வரும் வாகனங்கள் ஜெகஜீவன்ராம் சிலை அருகே திருப்பி விடப்பட்டு சிடிஎச் சாலை -புழல் – தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் அல்லது புழல் செல்லலாம்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.