அட்மின் மீடியா
0
புதுச்சேரி மின்கட்டண உயர்வு – யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயர்வு முழு விவரம்
புதுச்சேரியில் மூன்று மாதங்களுக்கு மின்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2023 -24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்காக மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
புதுச்சேரியில் மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடுசெய்ய அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு 100 யூனிட் வரை 25 பைசாவும், 101 முதல் 200 யூனிட் வரை 36 பைசாவும், 201 முதல் 300 யூனிட் வரை 40 பைசாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தக மின்கட்டணம் 100 யூனிட் வரை 66 பைசாவும், 101 முதல் 250 யூனிட்டுக்கு 77 பைசாவும், 250 யூனிட்டுக்கு 77 பைசாவும் யூனிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தெருவிளக்கு யூனிட்டிற்கு 78 பைசாவும், எல்டி தொழிற்சாலை யூனிட்டிற்கு 70 பைசாவும், எல்டி தண்ணீர் தொட்டிக்கு யூனிட்டிற்கு 72 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டிற்கு 25 பைசாவும், 101 முதல் 200 வரை யூனிட்டிற்கு 36 பைசாவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டிற்கு 59 பைசாவும், 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 75 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 60 பைசாவும், எச்டி வர்த்தக யூனிட்டிற்கு 62 பைசாவும், விளம்பர பலகைகளுக்கு யூனிட்டிற்கு 59 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.
எனவே இந்த கூடுதல் மின்கட்டணம் உயர்வு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.