சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க பிரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சிசிடிவி வீடியோ telangana child died shock

அட்மின் மீடியா

0

சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க பிரிட்ஜை தொட்ட 4 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சிசிடிவி வீடியோ

தெலங்கானாவில் உள்ள ஓர் சூப்பர் மார்ர்கெட்டில் உள்ள பிரிஜ்ஜில்  இருந்து சாக்லேட் எடுக்க முயன்ற 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் நவிபேட்டாவைச் சேர்ந்த ராஜசேகர், சம்யுக்தா தம்பதியினர் தங்கள் 4 வயது மகள் ரிதிஷாவை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றனர்.

அப்போது அந்த கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து சாக்லேட் ஒன்றை எடுக்க முயன்ற சிறுமி மீது மின்சாரம் தாக்கியது. 

அருகில் இருந்த தந்தை பக்கத்தில் இருந்த மற்றும் ஒரு குளிர்சாதனப்பெட்டியில் ஐஸ்கிரீமைத் தேடிக்கொண்டிருந்தார்

பக்கத்தில் குழந்தைக்கு ஷாக் அடிக்கின்றது என்பதை அறியாத அவரது தந்தை தொடர்ந்து ஐஸ்கிரீமை தேடினார். சில வினாடிகளுக்குப் பிறகு, அவர் நகரத் தொடங்கியபோது, ​​​​ரிஷிதா ஃப்ரிட்ஜ் கதவுடன் தொடர்பு கொண்ட கையால் தொங்குவதைக் கண்டார். அவர் உடனடியாக குழந்தையை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. த

கவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர், போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்கள்

இந்நிலையில் சிறுமி சாக்லேட் எடுக்க பிரிஜ்ஜை திறக்க முற்பட்ட போது ஷாக் அடிக்கும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது

 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/TeluguScribe/status/1708799694162530644